இலவச கண் சிகிச்சை முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்கிய மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட தலைவர் வாவ ராவுத்தர் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவ சேவை அணி ராஜா, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, நகர தலைவர் சேட் சாகிர் உசேன், நகர செயலாளர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 300-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண்ணின் தன்மை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 20 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் பங்கேற்றோருக்கு கண்ணை பாதுகாப்பாக பராமரிப்பு குறித்து வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் காவல் துணை சூப்பிரண்டு சின்ன கண்ணு, தாசில்தார் சடையாண்டி, மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் கண்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகன், பெரிய பள்ளிவாசல் ஜமாத் துணைத் தலைவர் காதர் மொய்தீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர் உசேன் உள்பட த.மு.மு.க. நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் அப்துல் ரகுமான் நன்றி கூறினார்.