300 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்


300 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்
x

300 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

விருதுநகர்

காரியாபட்டி,

300 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

ஆடுகள் வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஏழ்மை நிலையில் உள்ள கணவரை இழந்த, கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் ஆடுகள் வழங்கும் விழா தோணுகால், நரிக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு 300 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொருளாதாரத்தை மேம்படுத்த 5 ஆடுகளை ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு முழுமையாக செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதாரம் பெருகும்

வீட்டில் பெண்பிள்ளை பிறந்தால் நமக்கு வருத்தம் ஏற்படுகிறது. ஆனால் ஆடு பெண்குட்டி போட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்தகாலங்களில் ஆடுகள் மூலம் வருமானத்தை வைத்து கோவில்களில் விளக்கு ஏற்றப்பட்டது.

ஆனால் இன்று வீடுகளில் விளக்கேற்ற ஆடு வழங்கப்படுகிறது. ஆடுகள் பெருகினால் வீட்டில் பொருளாதாரம் பெருகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், யூனியன் தலைவர்கள் முத்துமாரி, பொன்னுத்தம்பி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், போஸ் தேவர், கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்கதமிழ்வாணன், கமலி பாரதி, சிவக்குமார், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story