மீனவ குடும்பத்தினர் 70 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா


மீனவ குடும்பத்தினர் 70 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை பகுதியை சேர்ந்த மீனவ குடும்பத்தினர் 70 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

ராமநாதபுரம்

வறுமையில் மீனவர்கள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், கீழக்கரை பகுதியை சேர்ந்த மீனவ குடும்பத்தினர் 70 பேருக்கு தலா 3 செண்ட் நிலத்திற்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கீழக்கரை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 30 ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தனர். பலர் வறுமை நிலையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

வீட்டு மனை பட்டா

மேலும் இந்த மீனவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் வீடு கட்ட இலவச வீட்டுமனை வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதன்பின்னர் தற்போது 70 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், துணை தாசில்தார் பரமசிவன் மற்றும் அதிகாரிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story