இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்


இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்
x

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர்


இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

வீட்டு மனைப்பட்டா

மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், விருதுநகர் நகராட்சியில் கம்மாபட்டி பகுதியில் வசிக்கும் ஆதி திராவிட மக்களுக்கு வீடு கட்டுவதற்கு இலவச வீட்டு மனை பட்டா நகர் பகுதியில் வழங்க வேண்டும் என கோரி உள்ளார்.

சிவகாசி தாலுகா செங்கமலப்பட்டி முருகன் காலனி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி உதவிட வேண்டும் என கோரி மனு கொடுத்துள்ளனர். ரோசல்பட்டி பஞ்சாயத்தில் குடிநீர் இணைப்பு முறையாக வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

இலவச வீடு

சாத்தூர் பகுதியை சேர்ந்த 30 திருநங்கைகள் தங்களுக்கு இலவச வீடு கட்டி தருமாறு மனு கொடுத்துள்ளனர். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலத்தில் பணியாற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் தங்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என மனு அளித்துள்ளனர்.

1 More update

Next Story