22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா


22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
x

ஜோலார்பேட்டை பகுதியில் 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை தேவராஜி எம்.எல்.ஏ.வழங்கினார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை பகுதியில் 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை தேவராஜி எம்.எல்.ஏ.வழங்கினார்.

ஜோலார்பேட்டை ஒன்றியம் கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சியில் பல வருடங்களாக வீட்டு மனையின்றி 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழஙங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 22 பயனாளிகளுக்கு நேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், தி.மு.க.கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் க.உமாகண்ணுரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தேவராஜி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவன் (கட்டேரி), ஜமுனா இளவரசன் (அம்மையப்பன் நகர்), ஜோலார்பேட்டை நகர தி.மு.க.செயலாளர் ம.அன்பழகன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.எஸ். பெரியார் தாசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story