50 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா


50 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
x

திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 50 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் பாலகிருஷ்ணாபுரம், அடியனூத்து, தோட்டனூத்து, சிறுமலை, முள்ளிப்பாடி, வெள்ளோடு உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கினார். இதில் ஏற்கனவே சாணார்பட்டி, சிலுவத்தூர், கம்பிளியம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்து கொடுக்கப்பட்ட பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. மேலும் கிழக்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் மனுக்கள் கொடுத்தனர். பின்னர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 50 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில், கிழக்கு தாசில்தார் அபுரிஸ்வான், மண்டல துணை தாசில்தார் தங்கமணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story