மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா


மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா
x
தினத்தந்தி 25 May 2023 1:00 AM IST (Updated: 25 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் நடந்த ஜமாபந்தியில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் நடந்த ஜமாபந்தியில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்.

ஜமாபந்தி

ஆனைமலை தாசில்தார் அலுவலகத்தில் மார்ச்சநாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துபொள்ளாச்சி, நாய்கன்பாளையம், பெரிய போது உள்ளிட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் ரேணுகாதேவி முன்னிலை வகித்தார். முகாமில் நத்தம் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 57 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் காளியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காக்காகொத்தி பாறையில் வீடு இல்லாமல் வசித்து வந்த மலைவாழ் மக்களுக்கு 23 இலவச வீட்டு மனை பட்டா மற்றும் கோபால் பதி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு 9 இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தாசில்தார் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மரக்கன்று நட்டார்.

இதையடுத்து ஆனைமலை சுகாதார நிலையத்தை அவர் ஆய்வு செய்தார். அம்பராம்பாளையம் ரேஷன் கடையில் ஆய்வு செய்து, பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

புதிய தாலுகா அலுவலகம்

இதேபோன்று கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் கலந்துகொண்டு கிராமங்களில் நில அளவைக்கு பயன்படுத்தக்கூடிய கிராஸ்டாப் செயினை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது கட்டி முடிக்கப்பட்ட புதிய தாலுகா அலுவலகத்தை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். மொத்தம் 105 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் தாசில்தார் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயசித்ரா, தலைமையிடத்து துணை தாசில்தார் செல்லத்துரை, மண்டல தாசில்தார் முத்து, வருவாய் ஆய்வாளர் கோபிலதா, கிராம நிர்வாக அலுவலர் விமல் மாதவன் மற்றும்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த வடக்கு உள்வட்டத்திற்கான ஜமாபந்தியில் சப்-கலெக்டர் பிரியங்கா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதில் 51 மனுக்கள் பெறப்பட்டது.


Next Story