இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்


இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
x

முதுகுளத்தூர் அருகே இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கல குறிச்சி கிராமத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன், கீழத்துவல் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வக்கீல் சங்க தலைவர் ராஜசேகர், கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். அப்போது நீதிபதி பேசும் போது, சிவில் வழக்குகள் சம்பந்தமான குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள், மற்றும் ஜாமீனில் வெளியே வருதல், வழக்குகளை நேரடியாக நீதிமன்ற நடைமுறையில் அல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வு பெற மக்கள் நீதிமன்ற நடுவர் அரங்கங்கள் பற்றிய விழிப்புணர்வு குறித்து விளக்கி கூறினார்.இதில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல், நீண்ட நாள் வழக்கு தீர்வு உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story