நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

நாகப்பட்டினம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

25 ஜோடிகளுக்கு திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

நாகை மாவட்ட இணை ஆணையர் மண்டலத்துக்குட்பட்ட காயாரோகணசாமி, நீலாயதாட்சியம்மன் கோவிலில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

இந்த திருவிழாவில் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சீர்வரிசை பொருட்கள்

மணமக்களுக்கு திருமாங்கல்யம், வெள்ளி மெட்டி, பித்தளை காமாட்சி விளக்கு, படி, குங்குமசிமிழ், பித்தளை குத்துவிளக்கு மற்றும் சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 47 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் நகர மன்ற தலைவர் மாரிமுத்து, மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர்கள் (நாகை) ராணி, (திருவாரூர்) மணவழகன், செயல் அலுவலர்கள் சீனிவாசன், பூமிநாதன், முருகன், கவியரசு, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story