5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x

ஒப்பிலியப்பன் கோவிலில் 5 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் இலவச திருமணம் நடந்தது.

தஞ்சாவூர்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமண விழாவை நடத்தி வைத்தார். அதன்படி திருநாகேஸ்வரம் பேரூராட்சி ஒப்பிலியப்பன் கோவிலில் சீர் வரிசையுடன் கூடிய இலவச திருமணங்களை 5 ஜோடிகளுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார். விழாவில் அறங்காவலர் குழுவின் தலைவர் மோகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் கணேசன், திருநாகேஸ்வரம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், திருநாகேஸ்வரம் பேரூர் தி.மு.க. செயலாளர் தாமரைச்செல்வன், அறங்காவலர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன், இளங்கோவன், மகேஸ்வரி துரைராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story