6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோவிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாதசுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருக்கோவில்களின் சார்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பில் திருமாங்கல்யம், உடைகள், முகூர்த்த மாலைகள் உள்ளிட்ட 44 வகையான சீர்வரிசை பொருட்களும் மணமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன், தி.மு.க. குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் ஜம்பு கென்னடி, இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன்,செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.


Next Story