திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில்இலவச திருமணத்துக்கான பதிவு தொடக்கம்
திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் இலவச திருமணத்துக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
வாணாபுரம்,
திருவரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வருகிற 1, 16, 24 ஆகிய தேதிகளில் ரங்கநாதர் கோவிலில் இலவச திருமணம் நடைபெற உள்ளது. இந்த தேதிகளில் திருமணம் செய்ய விருப்பமுள்ள ஜோடிகள் ரங்கநாதர் கோவில் அலுவலகத்திற்கு வந்து, திருமணம் ஆகவில்லை சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், வாக்காளர் அட்டை, மாற்று சான்றிதழ் (படிப்பு சான்று), திருமண அழைப்பிதழ், ரூ. 70 ஆயிரத்துக்குள் ஆண்டு வருமான சான்று, பாஸ்போர்ட்டு சைஸ் போட்டோ 3, தாய், தந்தை ஆதார் நகல் உள்ளிட்ட மேற்கண்ட ஆவணங்களை மணமகன், மணமகள் இருவரும் தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த இலவச திருமணத்தில் கலந்து கொள்ளும் மணமக்களுக்கு 4 கிராம் தாலி மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கான சீர்வரிசை பொருட்கள், புத்தாடை, பீரோ, கட்டில் போன்ற சீர்வரிசை பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.