இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாலிநோக்கம் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நட்ராஜ் கார்டியாக் கேர் மற்றும் வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் கிராம பொதுமக்கள் இணைந்து மக்கள் நலன் கருதி இலவச மருத்துவ முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முகாம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.முகாமில் நட்ராஜ் இருதய கிளினிக் நிறுவனரும், தலைமை மருத்துவருமான ஜோதிமுருகன் நடராஜன் தலைமை தாங்கினார். கிராம முக்கியஸ்தர்கள் வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் தலைவர் ரஹமத்துல்லா, ஒன்றிய கவுன்சிலர் காதர்சுல்தான், ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகமது, மற்றும் மஸ்தான், வாலிநோக்கம் காதர் மீரான்கான், அப்துல் காதர், அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேலாளர் சீனி முஹைதீன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, ரத்த அழுத்தம். இருதய நோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் முகாமில் கண்டறியப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நட்ராஜ் கார்டியாக் கேர் மக்கள் தொடர்பு அதிகாரி அன்சாரி, முருகானந்தம், மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.

1 More update

Related Tags :
Next Story