இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x

மழையூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த மழையூர் ஊராட்சி ஒன்றிய ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராமமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராகவன், வார்டு உறுப்பினர்கள் காஞ்சனா, நாகலட்சுமி, பழனி, தீபனா, ஜானகி, திலகவதி, இன்பவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் ஜோதிகா, பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, ரத்தசோகை, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story