இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x

தென்காசியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

தென்காசி

தென்காசியில் நகர இளைஞர் காங்கிரஸ், அன்னை உதவிக்கரங்கள் அறக்கட்டளை, கேரள ஆரோக்கிய ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது சுலைமான் என்ற ரபீக் தலைமை தாங்கினார். அன்னை உதவி கரங்கள் செல்லப்பா ராஜா வரவேற்றார். முகாமை மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் சாதிர், துணை தலைவர் கே.என்.எல்.சுப்பையா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், ஐக்கிய ஜமாத் வி.டி.எஸ்.ஆர்.முகமது இஸ்மாயில், டாக்டர் சங்கரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர்கள் அபிநந்தன், ரேஷ்மா, ராமமூர்த்தி, சத்தியமூர்த்தி குழுவினர் பரிசோதனை செய்தனர்.


Next Story