இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x

கவசம்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

வேலூர்

கே.வி.குப்பம் அடுத்த கவசம்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா தலைமை தாங்கினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் செழியன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் ரத்தப்பரிசோதனை, ரத்த அழுத்தம், கண் பார்வை, சர்க்கரை நோய், கர்ப்பிணிகளுக்கான சிறப்பு பரிசோதனை, ஆலோசனை, மற்றும் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர். இதில் 845 நோயாளிகள் பங்கு பெற்றனர். ஊராட்சி செயலாளர் பவித்ரா நன்றி கூறினார்.

1 More update

Next Story