இலவச மருத்துவ முகாம்
பொட்டல்புதூரில் இலவச மருத்துவ முகாம்
கடையம்:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பொட்டல்புதூர் கிளை, ஸ்ரீமூகாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை பொட்டல்புதூர் அரசு பள்ளியில் நடத்தியது. இதற்கு கிளைத்தலைவர் மதார் மைதீன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. நகர செயலாளர் ஆட்டோ மைதீன், ம.ம.க. கிளைச்செயலாளர் முகமது அலி, கிளை பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் கோதர் மைதீன் வரவேற்றார்.
முகாமை த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன் சேட் கான் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் முகமது யாகூப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், த.மு.மு.க. முன்னாள் மாவட்ட தலைவர் நைனார் முஹம்மது, பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வீராசமுத்திரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாகூர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட துணைச்செயலாளர் அபூபக்கர் சித்திக் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்.