இலவச மருத்துவ முகாம் 


இலவச மருத்துவ முகாம் 
x

ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் நடந்த இலவச மருத்துவ முகாமை வில்வநாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக அ.செ வில்வநாதன் எம்.எல்.ஏ. மற்றும் ஆம்பூர் தி.மு.க. நகர செயலாளரும், நகரமன்ற துணைத்தலைவருமான எம்.ஆர்.ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்கள்.

முகாமில் மாவட்ட அவைத்தலைவர் ஆனந்தன், 5-வது வார்டு உறுப்பினர் வசந்த்ராஜ், ஆம்பூர் நகராட்சி ஆணையர் ஷகிலா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story