இலவச மருத்துவ முகாம்
கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் ரோட்டரி கிளப், தென்காசி மீரான் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை கடையநல்லூர் அர் ரஹ்மான் நர்சரி பள்ளியில் நடத்தியது. தியாகராஜன் தலைமை தாங்கினார். காஜா மைதீன் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் மீராள்ஹைதர்அலி, முருகன், முகைதீன் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், முன்னாள் ரோட்டரி கவர்னர் சேக்சலீம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
டாக்டர்கள் அப்துல்அஜீஸ், முஹம்மது மீரான் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story