இலவச மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிவகங்கை
தேவகோட்டை
தேவகோட்டை அருகே சிலாமேநாடு பங்கு, புனித மாற்கு ஆலயத்தில் தவக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. சிலாமேகவளநாடு கிளை புனித வின்சென்ட் தே பவுல் சபையும், தேவகோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கமும் இணைந்து இந்த முகாமை நடத்தியது. முகாமை பங்குத்தந்தை அமல்ராஜ் தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் ஜெயக்குமார், கணியன் பூங்குன்றன் மற்றும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் ஈ.சி.ஜி.போன்ற மருத்துவ பரிசோதனைகளும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. தேவகோட்டை வட்டாரசபை தவைவர் மைக்கேல் குருஸ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். முகாமில் 50 பெண்கள் உள்பட 70 நோயாளிகள் பயன்பெற்றனர். கிளை சபை தலைவர் நசரேஸ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை புனித வின்சென்ட் தேபவுல் சபை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story