இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 1 May 2023 12:30 AM IST (Updated: 1 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

செக்காரக்குடியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில், பிஷப் கால்டுவெல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் வல்லநாடு பொது மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது. கல்லூரி செயலாளர் எபனேசர் மங்களராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயபத்ம தீபா முன்னிலை வகித்தார். செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார். அதே போன்று கண் பரிசோதனை, பிசியோ தெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டன. முகாமில் மொத்தம் 120 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்யதலி பாத்திமா, பிரேம்சிங் முத்துபாலன் ஆகியோர் செய்து இருந்தனர்.





Next Story