இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x

தென்காசி அருகே வடகரையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தென்காசி அருகே உள்ள வடகரை உசைனியா முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தென்காசி மீரான் மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவூது தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அசனார், தீ.ப. பள்ளிவாசல் செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் கனி, செய்யது முகமது என்ற கருதப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இமாம் சாகுல் ஹமீது துஆ செய்தார்.

மீரான் மருத்துவமனை தலைமை டாக்டர் அப்துல் அஜீஸ், இருதய மற்றும் சர்க்கரை நோய் டாக்டர் முகமது மீரான் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் இ.சி.ஜி., ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. சிறப்பு சிகிச்சைக்காக முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மீரான் மருத்துவமனைக்கு 20 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தீ.ப.பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story