ஆனைமலையில் பா.ஜனதா சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஆனைமலையில் பா.ஜனதா சார்பில் இலவச மருத்துவ முகாம்
ஆனைமலை
ஆனைமலை அருகே காளியாபுரத்தில் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க., ஆல்வா மருத்துவமனை, பா.ஜ.க. மாவட்ட மருத்துவரணி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இந்த முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை, பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்த சோகை உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுமார் 150 பேர்கள் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கு பா.ஜ.க மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் கே. எஸ். ஆல்வா தலைமை தாங்கினார். முகாம் ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவர் அணி பிரிவு தலைவர் பி.ஆர்.ஜி. பால்ராஜ் செய்திருந்தார். முகாமில் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் ஜோதி சரவணன், டாக்டர் ரமா பிரியா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வசந்த ராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் துரை, மாவட்ட செயலாளர்கள்ஆறுச்சாமி, ஆறுமுகம், தொழில் பிரிவு தலைவர் செல்வகுமார், ஆனைமலை மண்டல தலைவர் ராஜ் கணேஷ், இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரன், விவசாய அணி திருமலைசாமி, செயற்குழு உறுப்பினர் நாட்ராய சுவாமி, ஊராட்சி பொறுப்பாளர் ராமராஜன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப தலைவர் விஜயகுமார், கிளைத் தலைவர்கள் தண்டபாணி, நாகராஜ், தகவல் தொழில்நுட்ப மண்டல அணி வேலுமணி ஒன்றிய பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, ஆனைமலை நகர தலைவர் வேல்பாண்டியன், வேட்டைக்காரன் புதூர் நகர தலைவர் செல்வராஜ், ஒடையகுளம் நகர தலைவர் சேனாதிபதி, ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.