விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்
x

ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்துக்குட்பட்ட சிப்காட் ராஜீவ்காந்தி நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ்கர்ணா தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் இளைஞர்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து மணியம்பட்டு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ்கர்ணாவுக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

குண்டா சார்லஸ், சசிகுமார், ராஜா, சுரேஷ், பெல் சேகர், நகரமன்ற உறுப்பினர் நரேஷ், நகர செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story