மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம்
மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம்
சிவகங்கை
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே மேலவண்ணாரிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் ஜோதி பித்திரை செல்வம் தலைமை தாங்கி ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அங்கு பயிலும் 190 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து இதே பள்ளியில் படித்த மாணவி பிரிசில்லா மேரி கட்டுகுடிபட்டி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர் சின்னம்மாள் மென்னன், பள்ளி தலைமையாசிரியர் ரேணுகா, துணை தலைவர் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story