இலவச முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி


இலவச முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
x

ஆற்காடு இலவச முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சியை வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து செய்யார் செல்லும் புறவழிச் சாலையில் மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்த முதியோர் இல்லத்தில் 25 ஆண், 25 பெண் முதியவர்கள் தங்க வைக்கப்பட்டு மூன்று வேளை உணவு வழங்கி பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காலத்தில் சாலை ஓரத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் உணவின்றி தவித்து வந்ததை அறிந்து முதியோர் இல்லத்தின் மூலம் சாலையோரத்தில் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள 550 நபர்களுக்கு தினமும் மதிய உணவை வழங்கி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முதியோர் இல்லத்தில் தினசரி வழங்கப்பட்டு வரும் உணவின் 9 லட்சமாவது உணவை வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடங்கிவைத்தனர்.

ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், இலவச முதியோர் இல்ல தலைவர் ஜே.லட்சுமணன், துணைத் தலைவர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story