இலவச பொது மருத்துவ முகாம்
வந்தவாசியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆயிரவைசியர் சங்க மாநில தலைவர் ஏ.எஸ்.கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரவைசியர் சங்கம், ஸ்ரீசத்புத்ரி நாயகி ஆயிரவைசிய மகளிர் சங்கம் மற்றும் புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் வந்தவாசியில் நடைபெற்றது.
முகாமுக்கு வந்தவாசி ஆயிரவைசியர் சங்க தலைவர் டி.சந்தானம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் இரா.அருணாசலம், பொருளாளர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை டாக்டர் செய்திக், டாக்டர்கள் பால், அபிநயா, ஜெகன், தீபன் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் 400 பேருக்கு கண், காது, தொண்டை, இருதயம், மகப்பேறு, ரத்த கொதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சங்க துணைத்தலைவர்கள் எஸ்.ராமலிங்கம், எஸ்.அருண்குமார், சங்க செயற்குழு உறுப்பினர் ஜி.மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.