இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்


இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
x

குடியாத்தத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை நகரமன்ற தலைவர் சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.

வேலூர்

உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு குடியாத்தம் நகராட்சி மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை இணைந்து கொண்ட சமுத்திரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தியது. குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் மொகைதீன் முன்னிலை வகித்தார்.

முகாமில் வேலூர் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் எஸ்.சரஸ்வதி, கால்நடைத்துறை உதவி இயக்குனர் பி.எஸ்.மஞ்சுளா, கால்நடை உதவி மருத்துவர் எம்.ரமேஷ் ஆகியோர் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு வெறிநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் கலந்து கொண்டு வெறி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து செல்ல வளர்ப்பு பிராணிகளிடம் வெறிேநாய் எனப்படும் ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள், அதை தடுப்பதற்கான வழிமுறைகள், தடுப்பூசி செலுத்துவது, நோய் கண்ட பின் அதற்கான மருத்துவ சிகிச்சை ஆகியவை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் கால்நடைத்துறை அலுவலர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.


Next Story