கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை - 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை - 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
x

மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த 25 ஆம் தேதி முடிவடைந்தது.

சென்னை,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்ட பிரிவு 12 (1) (சி)ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த 25 ஆம் தேதி முடிவடைந்தது.

மொத்தம் 8,238 தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 94,256 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருப்பதால், அந்த இடங்களுக்கு மே 30 ஆம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story