கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம்
நாசரேத்தில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடந்தது.
நாசரேத்:
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான கோடைகால கால்பந்து இலவச பயிற்சி முகாம் தொடங்கியது. நாசரேத் கத்தீட்ரல் உதவி குருவானவர் பொன் செல்வின் அசோக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம்குமார் வரவேற்றார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் ரூபன் மற்றும் வெஸ்ட் என்ட் கிளப் நிர்வாகி லேவி அசோக் சுந்தரராஜ் ஆகியோர் விளையாட்டு வீரர்களை வாழ்த்தி பேசினர்.
கால்பந்து பயிற்சியாளர்களாக ரோக்லண்ட், பபிடோ, வினோத், ராபர்ட் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். முகாமில் கதீட்ரல் சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜான்சன், வெஸ்ட் என்டு நிர்வாகிகள் உள்பட நாசரேத் மற்றும் சுற்று வட்டார பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெஸ்ட் என்ட் கிளப், மர்காஷிஸ் ரெக்கிரியேசன் கிளப் மற்றும் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கால்டுவெல், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் ஆகியோர் செய்து உள்ளனர்.