பள்ளி மாணவர்களுக்கான இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்
பள்ளி மாணவர்களுக்கான இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
விளையாட்டு பயிற்சி முகாம்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான இலவச கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு, பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்திலும், அரியலூர் மாவட்டத்திற்கு, அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் முகாம் நடத்தப்படவுள்ளது.
முகாம் நடைபெறவுள்ள நாட்களில் தினமும் காலை 6.30 மணி முதல் காலை 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேருவதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். எனவே இந்த பயிற்சி முகாமில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் மாணவரல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம்.
பதிவு செய்து கொள்ளலாம்
முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 5 மணி வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரடியாக சென்றோ அல்லது செல்போன் எண்கள் மூலமாகவோ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் வருகிற 1-ந் தேதி மாலை 4 மணியளவில் அந்தந்த மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் வருகை தர வேண்டும். மேலும் பெயர்களை பதிவு செய்திட பெரம்பலூர் மாவட்டத்தில் டேக்வாண்டோ பயிற்றுனர் பரணிதேவியை 9944413861 என்ற செல்போன் எண்ணிலும், தடகள பயிற்றுனர் துர்காவை 6380784594 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதே போல் அரியலூர் மாவட்டத்தில் பெயர்களை பதிவு செய்திட ஆக்கி பயிற்றுனர் கார்த்திகேயனை 7010924919 என்ற செல்போன் எண்ணிலும், ஹேண்ட்பால் பயிற்றுனர் ஹரிகரனை 9840836339 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ரமணசரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.