வடக்கநந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில் 430 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் உதயசூரியன் எம்.எல்.ஏ. வழங்கினார்


வடக்கநந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில்  430 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள்  உதயசூரியன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x

வடக்கநந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 430 பேருக்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநத்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் 430 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வடக்கநந்தல் பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் ஜெயவேல், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தண்டபாணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகி திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் 430 பேருக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேரூராட்சிமன்ற கவுன்சிலர் பெரியம்மாள், முன்னாள் நகர செயலாளர் அர்ஜுனன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story