பிரிதிவிமங்கலம், பழங்கூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
பிரிதிவிமங்கலம், பழங்கூரில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தியாகதுருகம்,
விலையில்லா பாடப்புத்தகங்கள்
தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார வள மைய பயிற்றுனர் கோகிலா, தலைமை ஆசிரியை மணிமொழி, ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கினார்.
இதில் பட்டதாரி ஆசிரியை பிருந்தா, ஓவிய ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சங்கர், வித்யா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் தமிழரசன் நன்றி கூறினார்.
பழங்கூர் அரசு பள்ளி
திருக்கோவிலூர் ஒன்றியம் பழங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜு தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி, நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரமேஷ், பட்டதாரி ஆசிரியர்கள் பிரசன்னா, சியாமளா, பகுதி நேர ஆசிரியர் சரஸ்வதி, தற்காலிக ஆசிரியர்கள் சிவக்குமார், தமிழ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.