கோடைக்கால இலவச பயிற்சி முகாம் தொடங்கியது


கோடைக்கால இலவச பயிற்சி முகாம் தொடங்கியது
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையாட்டு கோடைக்கால இலவச பயிற்சி முகாம் தொடங்கியது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடைக்கால இலவச பயிற்சி முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை 15 நாட்கள் பயிற்சி முகாம் நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில், பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள், இதர விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் உலகத் திறனாய்வு தடகள போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என 220 பேர் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மேற்பார்வையில், காலை 6 மணி முதல் 8 மணி வரை பல்வேறு உடற்பயிற்சியும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை கால்பந்து, தேக்வாண்டோ, தடகளம், கைப்பந்து, ஜூடோ ஆகியவற்றிற்கும் பயிற்சி நடக்கிறது.


Next Story