விஞ்ஞான முறையில் இறைச்சிக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்; 30-ந் தேதி நடக்கிறது


விஞ்ஞான முறையில் இறைச்சிக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்; 30-ந் தேதி நடக்கிறது
x

விஞ்ஞான முறையில் இறைச்சிக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் 30-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சி பகுதியில் செங்குணம் கைகாட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விஞ்ஞான முறையில் இறைச்சிக்கோழி வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞான முறையில் இறைச்சிக்கோழி வளர்ப்பு, இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரில் வந்ேதா அல்லது 9385307022 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோ பெயர் பதிவு செய்து, கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள வரும்போது ஆதார் எண்ணை அவசியம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story