சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு 615 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட போட்டி தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வாரநாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகளும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story