வேலைவாய்ப்பு அலுவலகத்தில்சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகலெக்டர் தகவல்
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், தமிழ்நாடு காவல் துறையில் துணை ஆய்வாளர் பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில், அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. எனவே விருப்பமுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.