சப்-இன்ஸ்பெக்டர் பணியிட தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
சப்-இன்ஸ்பெக்டர் பணியிட தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்களை உள்ளடக்கி மொத்தம் 621 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இதற்கான கல்வி தகுதி பட்டப் படிப்பு தேர்ச்சியாகும்.
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜூன் 30-ந் தேதி ஆகும். இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகளும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெற விருப்பம் உள்ள மனுதாரர்கள் studycirclevnr@mail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.