இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம், கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி


இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம், கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி
x

இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம், கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழக அரசுடன் இணைந்து அனுபவமும் திறமையும் வாய்ந்த வல்லுநர்களை கொண்டு சுயதொழில் தொடங்குவதற்கு இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியோடு தொழிலுக்கான வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு, சந்தை ஆய்வு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற வாழ்வியல் திறன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் காணொலி காட்சி மூலம் செயல்முறை விளக்கங்களும், இந்தநிறுவனத்தின் மூலமாக பயிற்சி பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய தொழில் முறைகளை பற்றியும், தொழில் அனுபவங்களை பற்றியும் கருத்துக்கள் பகிரப்படுகிறது.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்துடன் தொழில் தொடங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற இலவச சேவைகளும் வழங்கப்படுகிறது. தற்போது இயற்கை விவசாயம் மற்றும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளது. பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் வருகிற 11-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் நேரிலோ அல்லது அஞ்சல் அட்டை மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், 14, புதுப்பேட்டை ரோடு, திருப்பத்தூர் என்ற முகவரியில் அணுகலாம்.

இந்்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story