செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்


செல்லப்பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்
x

வேலூரில் செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

வேலூர்

வேலூரில் செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு வேலூர் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குனர் கோபிகிருஷ்ணா முகாமின் திட்ட அறிக்கையை வாசித்தார். உதவி இயக்குனர் அந்துவன் வரவேற்றார்.

இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் விதவிதமான நாய்களை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இந்த முகாம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் சுமார் 46 இடங்களில் தடுப்பு ஊசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் மற்ற நாட்களில் அரசு கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.


Next Story