சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் குருபூஜை விழா
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் குருபூஜை விழா நடைபெற்றது
சிவகங்கை
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் குருபூஜை விழாவையொட்டி முன்னாள் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அணி சார்பில் சிவகங்கை அருகே சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட மானாகுடி கிராமத்தில் அழகுமுத்துகோன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன், கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இளையான்குடி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணபிரபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சித்தார்த்தன், முத்துக்குமார், சுகபதி, திருஞானம், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுந்தரபாண்டியன், சட்டமன்ற தொகுதி செயலாளர் நாகராஜன், பழனி, தெய்வேந்திரன், நகர் செயலாளர் கே.வி.சேகர், பாலா நமசிவாயம், ரவிக்குமார், மாவட்ட நிர்வாகிகள் பழனியப்பன், பழனி, ராமாமிருதம், கயல்விழி பாண்டியன், கணேஷ் பாபு, முனியசாமி, மாரி, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முத்துப்பாண்டி, சேகர் முருகேசன், மனோகரன், குமரன், தவம், நெட்டூர் ஜெயராமன், மருதுபாண்டி, சிங்கம்புணரி உதயகுமார் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இளையான்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் கலை முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.