உறை கிணறில் கூடுதல் அடுக்குகள் வெளிவந்தன
கீழடியில் உறை கிணறில் கூடுதல் அடுக்குகள் வெளிவந்தன.
சிவகங்கை
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 8-ம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில் 8-வதாக தோண்டப்பட்ட குழியின் ஓரப்பகுதியில் ஒரு சுவர் தென்பட்டதால், அதன் அருகில் 9-வது குழி தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. சுவர் கண்டறியப்பட்ட இடத்தின் அருகே ஆழமாக தோண்டியதில் சுடுமண் உறைகிணறு வெளிவந்தது. முதலில் உறைகிணற்றின் இரண்டு அடுக்குகள் வெளியே தெரிந்தன.
தொடர்ந்து தோண்டியதில் தற்ேபாது வரை மொத்தம் 6 அடுக்குகள் வரை வெளிவந்துள்ளன. இதில் 5, 6-வது அடுக்குகள் நிறம் மங்காமல் புதிய உறைகள் போலவே தென்படுகின்றன. எனவே அந்த உறை கிணற்றின் மொத்த உயரத்தை அறிய தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story