திருப்பாச்சேத்தி கண்மாயில் தென்பட்ட உறைகிணறு
திருப்பாச்சேத்தி கண்மாயில் உறைகிணறு தென்பட்டது.
சிவகங்கை
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கண்மாய் உள்பகுதியில் விவசாய வேலைகளுக்கு வாகனங்கள் செல்ல மண் சாலை அமைக்க மண் அள்ளி உள்ளனர். அப்போது, சிறிய கிணறு போல் தென்பட்டுள்ளது. அந்த கிணற்றை தோண்டியபோது 3 அடுக்கு உறைகிணறு வௌிப்பட்டது. அதற்கு மேல் தோண்டினால் இடிந்து சேதாரம் ஆகிவிடும் என நினைத்து அப்படியே விட்டு விட்டனர். இது குறித்து அப்பகுதியினர் கூறும் போது, தொல்லியல் துறையினர் தோண்டினால் தான் சேதாரம் இல்லாமல் இந்த உறைகிணறை எடுக்க முடியும்.. இன்னும் கூடுதலாக உறை அடுக்குகள் புதைந்துள்ளன, என தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் தொல்லியல் துறையினர்அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story