சரக்கு ரெயில் மூலம் 1,232 டன் உரங்கள் வந்தது


சரக்கு ரெயில் மூலம் 1,232 டன் உரங்கள் வந்தது
x

புனேயில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,232 டன் உரங்கள் வந்தது.

தர்மபுரி

புனேயில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,232 டன் உரங்கள் வந்தது.

ரெயிலில் உரங்கள் வந்தது

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக புனேவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,232 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் வந்தது. இந்த உரங்களை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

உரம் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு உரங்கள் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பும் பணியை வேளாண்மை இணை இயக்குனர் விஜயலட்சுமி, வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உரக்கடைகளுக்கு 126 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் மற்றும் இருப்பு குடோனில் வைப்பதற்கு 471.68 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

லாரிகளில் அனுப்பி வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட உர கடைகளுக்கு 634.32 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது விற்பனை அலுவலர் கார்த்திக், மொத்த விற்பனையாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அரசு மானிய உரங்களை விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் பெற்று பயனடைய வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Next Story