சரக்கு வாகனம் மோதல்; பழவியாபாரி சாவு


சரக்கு வாகனம் மோதல்; பழவியாபாரி சாவு
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 3:32 PM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனம் மோதி பழவியாபாரி இறந்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே ஒச்சத்தேவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த பழ வியாபாரி செந்தூர பாண்டி(வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து மாம்பழம் உள்பட பல்வேறு பழங்களை கொள்முதல் செய்து, அதனை சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றி கொண்டு தனது நண்பர் குமரசக்தியுடன்(32) வந்து கொண்டிருந்தார். அபிராமம் அருகே சென்றபோது கமுதியில் இருந்து மதுரை நோக்கி சென்ற மற்றொரு சரக்கு வாகனமும், அவர்கள் சென்ற சரக்கு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழ வியாபாரி செந்தூரபாண்டி படுகாயம் அடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்றொரு சரக்கு வாகனத்தின் டிரைவர் எஸ்.காவனூர் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (32) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story