சாலைகள் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து


சாலைகள் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து
x

கரூரில் இருந்து ஈரோடு, தாராபுரம் செல்லும் சாலைகள் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்

கரூர்

தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

தமிழக மற்றும் மத்திய அரசுக்கு அந்நிய செலாவாணியை ஈட்டி தரும் பகுதியாக கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் விளங்கி வருகிறது. கரூர் மாவட்டம் கடந்த பல ஆண்டுகளாக டெக்ஸ்டைல் ஏற்றுமதி துறையில் கால் பதித்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளக்கி வருகிறது. கரூரில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு 68 கிலோ மீட்டரும், கரூரில் இருந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு சுமார் 70 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.

இந்நிலையில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி தொழில் மட்டுமல்லாமல் பல்வேறு பணி நிமிர்த்தமாக கரூர் மக்கள் ஈரோட்டிற்கும், தாராபுரத்திற்கும் சென்று வருகிறனர். அதேபோன்று ஈரோடு மற்றும் தாராபுரத்தில் இருந்து கரூருக்கு தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் தொழில் அதிபர்களும் பல்வேறு காரணங்களுக்காக சென்று வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.

விபத்தில் சிக்கும் அபாயம்

இதனால் கரூர்-ஈரோடு சாலை, கரூர்-தாராபுரம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். கரூரில் இருந்து ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் 60 வேகத்தடைகளும், தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் அதிகமான வேகத்தடையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடைகளில் பல இடங்களில் வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வேகத்தடைகளை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கிறது. மேலும் 2 சாலைகளும் குறுகலாக உள்ளதாலும் சில நேரங்களில் அதிகமான விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

கோரிக்கை

இந்த வேகத்தடைகளில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக கரூரிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டுக்கு செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு மேலாகிறது.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்றியும், கரூர்-ஈரோடு, கரூர்- தாராபுரம் செல்லும் சாலைகைளை அகலப்படுத்தி விபத்தினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story