தவுட்டுப்பாளையத்தில் அடிக்கடி மின்தடை


தவுட்டுப்பாளையத்தில் அடிக்கடி மின்தடை
x

தவுட்டுப்பாளையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பிரசித்தி பெற்ற கோவில்களும் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு புகழூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தவிட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் 10 முதல் 15 முறை மின்சாரம் தடைப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். மேலும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story