திருமணமான 4 மாதத்தில் கோவில் பந்தலில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை - உசிலம்பட்டி அருகே பரிதாபம்

திருமணமான 4 மாதத்தில் கோவில் பந்தலில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள சடச்சிபட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் தங்கப்பாண்டி (வயது 25), மினிவேன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆகிறது. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்றவர் அதன்பிறகு வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தங்கப்பாண்டியை பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் அதே ஊரில் உள்ள ஒரு கோவிலில் திருவிழாவுக்காக போடப்பட்டு இருந்த பந்தலில் தங்கப்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தப்பநாயக்கனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கோவிலில் திருவிழா சமீபத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆன 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொைல செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.