நூலக நண்பர்கள் திட்டம் தொடக்கம்


நூலக நண்பர்கள் திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 26 April 2023 12:15 AM IST (Updated: 26 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நூலக நண்பர்கள் திட்டம் தொடங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்:

வாணாபுரம் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஊர்ப்புற நூலகத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர், இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் வீடு தேடி சென்று புத்தகங்கள் வழங்கும் நூலக நண்பர்கள் திட்டம் மற்றும் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நூலகர் ஹஸினாபேகம் தலைமை தாங்கினார். வாணாபுரம் ஊராட்சி செயலர் சேகர், நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்சியில் நூலக தன்னார்வலர்கள் கோவிந்தராஜ், சசிகுமார், ராதா, செல்வி மேரி, அபிராமி, தினக்கூலி பணியாளர் சிவகாமி, சமூக ஆர்வலர்கள் தினேஷ், விமல், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story