8-ந் தேதி முதல் 11 நாட்கள் புத்தக கண்காட்சி கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்


8-ந் தேதி முதல் 11 நாட்கள் புத்தக கண்காட்சி கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x

திருவண்ணாமலையில் 8-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 8-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் புத்தக புத்தக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புத்தக கண்காட்சி

திருவண்ணாமலை நகராட்சி காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் வருகிற 8-ந் தேதி புத்தக கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

11 நாட்கள்

திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் 11 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்கிறார்.

நகராட்சியின் மூலமாக அரங்கு மற்றும் மைதானப்பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மின்சாரத்துறையினர் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும். பொதுப்பணித்துறையின் மூலமாக அரங்குகளில் ஒளிவிளக்கு, ஒளிப்பெருக்கி, மேடை, ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தருவதுடன் மேற்கண்ட பணிகளின் உறுதித்தன்மையினை ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்.

100 அரங்குகள்

மேலும் 100 அரங்குகள் பல்வேறு துறைகளின் மூலம் புத்தக கண்காட்சிக்கு தனித்தனியாக வழங்கப்படவுள்ளன. குடிநீர் வசதி, கழிவறை வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உணவுக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சிறுவர்களுக்கு பொழுது போக்கு விளையாட்டு அம்சங்களுடன் கூடிய அமைவிடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். புத்தகக்கண்காட்சியில் தினசரி தமிழ் மொழியின் சிறப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் பேச்சாளர்கள் பங்கேற்று சொற்பொழிவாற்ற உள்ளனர்.

மேலும் இந்த புத்தக கண்காட்சியில் விற்பனையில் 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தககங்கள் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story